பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படும் பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3 லட்சமாக அதிகரிக்க முடிந்தால், நாட்டின் கடன்களை தீர்க்கவும் முடியும். இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற கல்வி வேலைத்திட்டம் ஒன்றின் அறிமுக நிகழ்வில் வைத்தே அவர் இதனைக் கூறியுள்ளார்.
பட்டதாரிகளை உருவாக்குவது தற்போது சிரமமான காரியமாகவுள்ளது.
ஆனால் அவர்களுக்கான தேவைகள் அதிகம் உள்ளன.
3 லட்சம் பட்டதாரிகளை உருவாக்க முடியுமாக இருந்தால், அரசுக்கு வருமானமாக பல மில்லியன் ரூபாய்களை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment