பத்தரமுல்ல - இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
ஆசிரியர்கள், அதிபர்களால், இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 22 வருடங்களாகத் தாம் எதிர்நோக்கிவரும் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குதல், 30 மாதங்களாக நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்தே, ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பத்தரமுல்ல - பெலவத்த பிரதேசத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment