சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்ட சீனப் பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தடல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போதே குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி தங்கியிருந்தவர்களே கைதாகினர்.
22 - 56 வயதுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டதாக தெரிவித்த
காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment