ஹற்றன் பொகவந்தலாவ பகுதியில் 100 வருடங்கள் பழமை வாய்ந்த நெருங்குடியிருப்பு ஒன்று தாழ் இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நெடுங்குடியிருப்பில் வசித்து வந்த 12 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
பொகவந்தலாவ டின்சின் தோட்டப்பகுதியில் உள்ள இந்த குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், சுவரின் கற்கள் சரிந்து விழுவதாகவும் கூறப்படுகிறது.
குடியிருப்பு அமைந்துள்ள நிலப்பகுதி தாழ் இறங்கியுள்ளதாக அங்கு வசிக்கின்ற மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உறவினர்கள் மற்றும் அயல்வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிராம உத்தியோகத்தர் மற்றும் தோட்ட முகாமைத்துவம் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment