புல்வாமா தாக்குதல் ; மரணித்தவரின் உறவுக்கு பணி நியமனம்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு முதலமைச்சர் பழனிசாமியால் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

காஷ்மீரின் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி கடந்த 14 ஆம் திகதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவசந்திரன் ஆகிய 2 தமிழர்களும் அடங்குவர்.

தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம்  நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இரங்கலும் வெளியிட்டார்.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் சிவசந்திரன், சுப்ரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.





Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment