கஞ்சா, கசிப்பைக் குடித்து வாழ்வைச் சிதைக்காதே - கிளிநொச்சியில் ஊர்வலம்!!

போதைப் பொருள் பாவனை அதிகரிப்புக்கு எதிராக மற்றும் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தில் கஞ்சா விற்பனை தொடர்பில்  தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  கிளிநொச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமான கண்டன ஊர்வலம், கிளிநொச்சி பொலிஸ் நிலையம் வரை சென்றடைந்து. அங்கு கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கான மனுக் கையளிக்கப்பட்டது.

போதைப் பொருள் பாவனைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை  ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனம், கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தக சங்கங்கள், புகைப்பட பிடிப்பாளர் சங்கம், கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு, கிளிநாச்சி வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை  மேற்கொண்டிருந்தனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment