இலங்கையின் தொடர் தோல்வி குறித்து வெளுத்து விளாசிய முரளி..!!!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  அவுஸ்திரேலிய அணி 366 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து, ஆட்டத்தை இடை நிறுத்தியது. அவுஸ்திரேலிய அணி மொத்தமாக 515 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது. 516 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கி துடுப்பெடுத்தாடியது. 366 ஓட்டங்களை பெற்று இரண்டு இன்னிங்ஸையும் நிறைவிற்கு கொண்டு வந்தது. இதனால் இரண்டு போட்டிகள் கொண்ட முரளி - வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முரளிதரன் - வோர்ன் கிண்ண இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டத்தினாலும், இரண்டாவது போட்டியில் 366 ஓட்டங்களினாலும் படுதோல்வியடைந்திருந்தது.

இந் நிலையில் இத் தொடரில் இலங்கை அணி அடைந்த படுதோல்வி குறித்து இலங்கை அணியின் கிரிக்கெட் ஜம்பவான் முத்தையா முரளீதரன் குறிப்பிடுகையில், 

இலங்கை அணிக்கு கடந்த மூன்று தொடக்கம் நான்கு ஆண்டுகளாக இந்த பரிதாப நிலையே தொடர்கின்றது. இலங்கை அணிக்கு சர்வதேச போட்டிகளில் களமிறங்கும் போது என்ன செய்ய வேண்டும் என்ற வியூகம் அவர்களிடம் இல்லை. அத்துடன் குசல் மெண்டிஸ் போன்ற இளம் வீரர்கள் திறமையுடையவர்கள். எனினும் அவர்களால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்ட முடியவில்லை. இது அவர்களின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கும். அதேபோல் அவுஸ்திரேலியாவின் ஆட்டமும் முன்னர் போன்று சிறப்பானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மாவன் அத்தபத்து,

இலங்கை கிரிக்கெட் அணி பல பின்னடைவுகளை கடந்த காலங்களில் கடந்து வந்திருந்தபோதிலும் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மிகவும் மோசமானது எனவும், சங்கக்கார, மஹேல, தில்சான், ரங்கன ஹேரத் ஆகியோரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment