யாழ்ப்பாணம் அரியாலை 100 ஆவது சுதேசிய திருநாள் கொண்டாட்ட விழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட ரீதியாக நடத்தும் கரப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்துக்கு புத்தூர் வளர்மதி விளையாட்டுக்கழக அணி தகுதி பெற்றுள்ளது.
அரியாலை திருமகள் சனசமூ நிலைய மைதானத்தில் நேற்று இடம் பெற்ற அரையிறுதியாட்டத்தில் இரண்டாவதாக இடம் பெற்ற ஆட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து , புத்தூர் வளர்மதி விளையாட்டுக்கழக மோதியது.
5 செற்களைக் கொண்டதாக இறுதியாட்டம் இடம் பெற்றது. புத்தூர் வளர்மதி விளையாட்டுக்கழக அணி முதல் இரண்டு செற்களையும் 25:20, 25:23 என்ற செற் கணக்கில் வெற்றி கொண்டது.
3 செற் ஆட்டத்தை ஆவரங்கால் இந்து இளைஞன் விளையாட்டுக்கழக அணி பலத்த போட்டியின் மத்தியில் 25:22 என்ற செற் கணக்கில் வெற்றி பெற போட்டி விறுவிறுபான கட்டத்தை எட்டியது.
4 செற் ஆட்டத்திலும் புத்தூர் வளர்மதி விளையாட்டுக்கழக அணி ஆதிக்கம் செலுத்தி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் போட்டி செல்ல ஆவரங்கால் இந்து இளைஞன் விளையாட்டுக்கழக அணியினர் ஒரு கட்டத்தில் 22:22 என்ற புள்ளி அடிப்படையில் முன்னிலை வகித்து வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்த்தனர்.
ஆவரங்கால் இந்து வீரர்களின் சிறு தடுமாற்றம் புத்தூர் வளர்மதி 25:23 என்ற புள்ளி அடிப்படையில் 4 வது சுற்றை வென்றது. ஆட்ட நேர முடிவில் 3:1 என்ற செற்கணக்கில் வெற்றி பெற்றது.
0 comments:
Post a Comment