வீடொன்றிலிருந்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
49 வயதான ஒருவரே இவ்வாறு நேற்று இரவு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெனியாய - கிரிவெலதொல பாலத்திற்கு அருகில் வீடொன்று சுற்றிவளைகப்பட்ட நிலையில் அங்கிருந்து துப்பாக்கி மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இன்றைய தினம் மொரவக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
0 comments:
Post a Comment