புல்வாமா தாக்குதல் திருப்பியடித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதன்போது, கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 

வீழ்த்தப்பட்ட விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளையும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

மற்றைய போர் விமானம் இந்தியாவின் காஷ்மீர் பகுதிக்குள் விழுந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்த இந்திய போர் விமானத்தில் வந்த இரு விமானிகள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

கைதான மற்றொரு இந்திய விமானி தன்னுடைய பெயர் மற்றும் விமானப்படையில் தனது பணி அடையாள எண் ஆகியவற்றை அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

எனது பெயர் அபினந்தன். நான் விமானப்படை விங் கமாண்டர் அதிகாரி. என்னுடைய பணி அடையாள (service No) எண்: 27 981 என அந்நபர் கூறும் வீடியோ மற்றும் அவரது புகைப்படங்களை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment