கிருஸ்ணகிரியை அடுத்த குருபரபள்ளியை வந்தடைந்த பிரமாண்ட கோதண்டர் ராமன்சிலை அங்குள்ள மார்க்கண்டேயர் நதி பாலத்தில் சிக்கியுள்ளதால் அதணை மீட்க அதித இழுவை திறன் கொண்டவாகனத்தை சென்னையில் இருந்து வரவழைக்க பயணக்குழு முடிவெடுத்துள்ளது.
தமிழகத்திலிருந்து கர்நாடக ஈஸ்வரா செல்லும் பிரம்மாண்ட கோதண்டர் ராமன்சிலை கடந்த டிசெம்பர் 7ம் திகதி திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டது. 350 டன் எடை கொண்ட இந்த சிலை கடந்த ஐந்து தினக்களுக்கு முன்பு கிருஸ்ணகிரி அடுத்த குருபரபள்ளி வந்தடைந்தது. அங்குள்ள மார்க்கண்டேயர் நதி பாலத்தின் வழியாக கொண்டு செல்ல இயலாத சூழல் ஏற்பட்டது. புதியதாக மண் சாலைகள் உயரமாக அமைக்கப்பட்டு நான்கு நாட்கள் முயற்சிக்கு பின் ஒரு வழியாக ஆற்றின் மறுகரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு சிலையை மேலே கொண்டு செல்ல எடுத்த முயற்சிகள் பயணளிக்க வில்லை. அதணையடுத்து ஆற்றில் சிக்கிய கோதண்டர் ராமன்சிலையை மீட்க அதித இழுவை திறனை கொண்டவாகனத்;தை சென்னையில் இருந்து வரவழைக்க பயணக்குழு முடிவெடுத்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம் பெறுகின்றது.
0 comments:
Post a Comment