பூச்சாடியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்த பகுதி ஒன்று பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நாத்தன்டிய - பனன்கொட பிரதேசத்தில் நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பூச்செடி வளர்க்கும் போர்வையில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதன்போது அயிரத்து 100 கஞ்சா செடிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் நாத்தன்டிய மற்றும் மாரவில பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் கஞ்சா செடி தொடர்பிலான உரிமையாளர் என்பதுடன் மற்றைய சந்தேகநபர் உதவியாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர்கள் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
0 comments:
Post a Comment