டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னனான மாகந்துரே மதுஷின் சொத்து மதிப்பு 500 கோடி ரூபாவுக்கும் மேல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாகந்துரே மதுஷிற்கு சொந்தமானதென கூறப்படும் அனைத்து கணக்குகளையும் சோதனையிடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
23 இற்கும் அதிகமான டுபாய் மற்றும் இலங்கை வங்கி கணக்குகளை பயங்கரவாத விசாரணை பிரிவினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வங்கி கணக்கிற்கு மேலதிகமாக மதுஷிற்கு சொந்தமானதென கூறப்படும் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவருக்கு சொந்தமான டுபாய் வங்கி கணக்குகள் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்வதற்காக சட்டரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய ஹெரோயின், கொக்கெய்ன், கப்பமாக பெற்ற பணம், கொலைகளுக்கான ஒப்பந்தப்பணம் ஆகியவை அடங்கலாக 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மதுஷ் வைப்பு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
0 comments:
Post a Comment