குறித்த விற்பனை நிலையம் வழமை போல் நேற்றரவு இரவு மூடப்பட்டுள்ளது. எனினும் இரவு 9 மணியளவில் மேற்படி விற்பனை நிலையத்தினுள் திடீர் என தீப்பரவல் ஏற்பட்ட நிலையில்,அ ருகில் உள்ள வர்த்தகர்களும், மக்களும் இணைந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு ,மன்னார் பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.
மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததோடு,மக்களை குறித்த பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.எனினும் நீண்ட நேரமாகியும் தீயை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
வர்த்தகர்களும்,மக்களும் இணைந்து தீ ஏற்பட்ட விற்பனை நிலையத்தின் பின் பகுதியில் இருந்து பௌசர் மூலம் கொண்டு வரப்பட்ட நீரை பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு மன்னார் நகர முதல்வர் ஞ.அன்ரனி டேவிட்சன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் வருகை தந்தனர்.
இதையடுத்து வவுனியா தீ அனைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இரவு 10.30 மணியளவில் வவுனியாவில் இருந்து மன்னாருக்கு வருகை தந்து தீயை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
நீண்ட நேரத்தின் பின் குறித்த தீ இரவு 11.45 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
குறித்த தீ பரவலின் காரணமாக விற்பனை நிலையத்தில் உள்ள பல இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய மற்றும் பழைய மின் சாதனப்பொருட்கள் தீயில் எறிந்து சாம்பளாகியுள்ளது.
இந் நிலையில் தீப்பரவலானது மின் ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட நாசகாரிய செயலா? என்பது தொடர்பில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
0 comments:
Post a Comment