கிளிநொச்சி பகுதியில் அமைக்கப்பட்ட பசுமை பூங்கா மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்கவினால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனால் ஏற்கனவே இப் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று அமைச்சரால் இரண்டாவது முறையாகத் திறக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கரைச்சி பிதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment