சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டாக கிடந்த சந்தியாவின் கொலை வழக்கில் நாளுக்கு நாள் புதுத்தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சந்தியாவை கொன்றதாக அவரது கணவர் பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருபக்கம் சந்தியாவின் தலை மற்றும் மற்றொரு கையை தனிப்படை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது, இந்நிலையில் பாலகிருஷ்ணன் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், சந்தியாவை உயிருக்கு உயிராக காதலித்தேன்.
அவரை திருமணம் செய்த நாள் முதல் கொலை செய்வதற்கு முன்பு வரை பாசமாக இருந்தேன், அவரும் என்னை காதலித்தார்.
என்னை மறக்ககூடாது என்பதற்காக மூன்று இடங்களில் பச்சை குத்தி இருந்தார், வலியை தாங்கி கொண்டு வலது மார்பில் பச்சை குத்தினார்.
நான் சிவன் பக்தன் என்பதால், சிவன் பார்வதியை பச்சை குத்தினார், சினிமாவில் வாய்ப்பு குறைந்த போதுகூட பிரியாணி கடை நடத்தி வந்தேன், அதற்கும் ஒத்துழைப்பாக இருந்தார்.
ஆனால் எங்கள் வாழ்வில் விதி விளையாடிவிட்டது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாலகிருஷ்ணனின் உறவினர்கள் அவரை ஜாமீனில் எடுக்க முயன்று வருகின்றார்களாம்.
0 comments:
Post a Comment