தமிழ் பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் இடம்பெற்றது.
ஓமந்தை அரசமுறிப்பு ,வேப்பங்குளம் கிராமத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலுக்கு அமைவாக வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சந்திப்பில் மக்களின் தேவைகள் அடையாளம் காணப்பட்டதுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அபிவிருத்தி குழுவும் உருவாக்கப்பட்டது .
நிகழ்வில் அமைச்சரின் நகர இணைப்பாளர், நகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment