குடல் வெளிவரும் அளவிற்கு கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் நடந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தென்மராட்சி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கானவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உடனடியாக அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment