படைப்புழுத் தாக்கம் விழிப்புணர்வுக் கூட்டம்

மன்னார் மாவட்ட மட்டத்தில் படைப்புழுவைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான கருத்தரங்கு  மாவட்ட செயலக  கேட்போர் கூட்டம்
நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் படைப் புழுத் தாக்கம், பாதிப்புக்கள், கட்டுப்பாட்டு முறைகள் என்பன விவாதிக்கப்பட்டன. 

மன்னாரில் பரப்புக்கடந்தான் உயிலங்குளம், மடுக்கரை போன்ற பகுதிகளில் சோளம், பயறு. கெளபீ போன்றவற்றில் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது. 


இரசாயன முறையில் அதைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும், பொறி முறை மூலம் கட்டுப்படுத்துவதே சிறந்தது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

பரிந்துரைக்கப்பட்ட அளவில் இரசாயனங்களைப் பயன்படுத்தல், வேப்பம் விதைக் கரைசலைப் பயன்படுத்தல், சுழற்சி முறையில் பயிரிடுதல் போன்ற முறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான நிறுவனங்களின் ஒருங்கிணைப்புகளும் பொறுப்புகளும் எனும் தலைப்பில் பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் கிளிநொச்சி அபிவிருத்தி நிலைய மேலதிக பணிப்பாளர் கலாநிதி எஸ்.அரசகேசரி மற்றும் முருங்கன் உதவி விவசாய ஆராய்ச்சி நிலையப் பணிப்பாளர் படைப்புழுவினை அடையாளம் காணுதல் மற்றும் படைப்புழுவின் தாக்கம் அவற்றின் கட்டுப்பாட்டு முறைப்பற்றி எஸ். இராஜேஸ்கண்ணாவும் கருத்துரை வழங்கினர். 

முருங்கன் அரச கால்நடை மருத்துவர். அதிகாரி சி.பி. வின்சென்ட் கால்நடைகளுக்கு ஏற்படும் கால்வாய் நோயினை அடையாளம் காணுதல், அவை பரவுதலைக் கட்டுப்படுத்தல் எனும் தலைப்பில் ஆராய்ச்சி மற்றும் சிறப்புரைகளை ஆற்றினர்.

இதில், மன்னார் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கே.எம்.ஏ.சுகுறு மற்றும் பிரதேச விவசாயப் போதனாசிரியர்கள், கமநல அலுவலர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment