வாகன விபத்தில் அதிமுக பிரமுகர் மரணம்!!!

இந்தியா திண்டிவனம் அருகே நடந்த வீதி விபத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உயிரிழந்துள்ளாதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று விழுப்புரம் தொகுதி உறுப்பினர்களின் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டுவிட்டு அங்கிருந்து நள்ளிரவில் காரில் அவரது சொந்த ஊருக்கு திரும்பும் போது இன்று காலை 4 மணியளவில் கார் திடீரென நிலை தடுமாறி வீதி தடுப்பில் பயங்கிரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் நாடாளமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், அவரது கார் சாரதி; உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு, உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு நாடாளமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உயிரிழந்ததுடன் மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அழிக்கப்பட்டு வருகிறது. மேலும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நாடாளமன்ற உறுப்பினர் ராஜேந்திரனின் உடலுக்கு அமைச்சர் சி.வி சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டதுடன் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து திண்டிவனம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நாடாளமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உயிரிழந்ததை அடுத்து, அமைச்சர் சி.வி.சண்முகம் அந்தந்த தொகுதி; மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவு விட்டத்திற்கு அமைய விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நடக்கவிருந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment