கடற்படைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

மன்னார் சிலாபத்துறை பகுதி மக்களின் பூர்வீக காணியில் குடியிருக்கும் கடற்படையினரை வெளியேற்றி புலம்பெயர்ந்து வாழும்   தங்களை,  மீள்குடியேற வழி சமைக்க வேண்டும் எனக் கோரி நேற்று சிலாவத்துறை மக்கள் இன்று மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணி விடுவிப்புத் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் இன்று முறைப்பாடு செய்தனர்.


முசலி பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி? தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த புதன் கிழமை மாலை முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

சிலாவத்துறை கிராமத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு 250 குடும்பங்கள் இடம் பெயர்ந்து கற்பிட்டி உள்ளடங்களாக வேறு இடங்களுக்குச் சென்றனர். 

இந்த நிலையில் போர் நிறைவடைந்த நிலையில் இடம் பெயர்ந்தவர்கள் 625 குடும்பங்களாக தமது சொந்த இடமான சிலாவத்துறைக்கு மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஓக்ஸட் மாதம் வந்தனர்.

  தங்கள் பூர்வீக காணியில் மீள்குடியேற முடியாது முசலி பிரதேச பகுதியில் பல்வேறு இடங்களில் தங்கி வாழ்கின்றனர். இவற்றில் 118 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் நிலப்பரப்பை கைப்பற்றிய  படையினர் கடற்படை முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

குறித்த காணியை விடுவித்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போதும், எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐந்து பேர்கள் கொண்ட குழுவினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டு அமைப்புகளின் ஆதரவுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் உப அலுவலகத்துக்குச் சென்று காணி விடுவிப்புச் சம்பந்தமான முறைப்பாட்டை இன்று தெரிவித்தனர்.






   
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment