மகளின் காதல் விவகாரம் வெளியில் தெரிந்து விடுமோ என பயந்து மகளை துடிக்கத் துடிக்க கொலை செய்துள்ளார் தந்தை ஒருவர்.
இந்தச் சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கட் ரெட்டி.
இவரது மகள் வைஷ்ணவி. வைஷ்ணவி தனியார் கல்லூரியில் கல்வி கற்பவர்.
இந்த நிலையில் வைஷ்ணவி தன்னுடன் படிக்கும் மாணவனைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தக் காதல் விவகாரம் வெங்கட் ரெட்டிக்கு தெரிய வரவே அவர் வைஷ்ணவியை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
வைஷ்ணவி தந்தையின் பேச்சை கேட்காமல் குறித்த மாணவனுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
மகளின் காதல் விடயம் எங்கே வெளியே தெரிந்து தமக்கு அவமானமாகிவிடுமோ என அஞ்சிய வெங்கட், வைஷ்ணவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பில் வெங்கட்டை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment