நடிகை லட்சுமி ராய் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தவறான செய்தி வெளியானதையடுத்து, லட்சுமிராய் காட்டமான பதிவொன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், “வாவ், நிஜமாகவா, உங்கள் பார்வைக்காக நீங்களே ஒரு ஆதாரமில்லாத செய்தியை எழுதி மக்களின் கவனத்தைப் பெற நினைக்கிறீர்கள். என்னிடம் கேளுங்கள் இதை விட சிறப்பான கதையைத் தருகிறேன்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
லட்சுமி ராய் இன்னும் திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழில் 'நீயா' படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார் லட்சுமி ராய்.
தெலுங்கில் அவர் நடித்துள்ள 'வேர் இஸ் வெங்கடலட்சுமி' விரைவில் வெளியாகவுள்ளது.
0 comments:
Post a Comment