பால்மாவின் சுகாதாரத் தன்மை மக்களுக்கு உகந்ததல்ல-மைத்திரி

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் சுகாதார ஆரோக்கியம் மக்களுக்கு உகந்தது அல்ல. இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.



கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர்  இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது,

நாட்டை முன்னேற்றுவதற்கு தேசிய பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். தேசிய பால் உற்பத்தி முன்னேற்றமடைந்தால் தான் தேசிய தொழில்துறை மிருக வளங்கள் அபிவிருத்தியடையும். நான் இவ்வாறு கூறுவதால் சர்வதேச நிறுவனங்கள் என்னுடன் கோபப்படுகின்றன.

போதை வர்த்தகர்கள், மதுபாவனையாளர்கள், மருந்து விற்பனையாளர்கள் எவர் என்னுடன் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. பால்மா விடயத்தில் என்னால் அமைதியாக இருக்க முடியாது.

ஆரோக்கியமான மக்களுக்கு தேசிய பாலே தேவை. நாம் பால்மா நிறுவனங்களிடம் அடி பணிந்துள்ளோம். பால்மாக்காரர்களால் நாட்டை தேவைக்கேற்ற மாதிரி அடிபணிய வைக்கலாம். நாட்டு மக்களின் சுகாதாரத்தை அடிபணிய வைக்க விடுவோமானால் அது மிகப் பெரிய தவறு.

உலக நாடுகளில் 10 , 15 வரையான நாடுகளே பால்மாவை இறக்குமதி செய்யும் நிலையில், எமது நாடும் அதில் உள்ளடங்குவது, மிகவும் துரதிஷ்டவசமானது-என்றார்.
Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment