இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் இரண்டு வருட கால அவகாசம் கொடுக்க கூடது எனவும் காணமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் போக்குவரத்து ஊழியர்களும் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.
மேலும் மன்னாரில் உள்ள அரச தனியார் அலுவலங்களுக்கும் பணியாளர்கள் சமூகமளிக்கவில்லை. இதனால் மன்னார் முழுவதும் இயல்பு நிலை பாதிப்பு அடைந்துள்ளதோடு மன்னாரில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
#MannarNews #DisappearedPeople #TamilPeople #Sumanthiran #RanilWickramasinghe #MahindaRajapaksa #MaithripalaSirisena #JaffnaStrike #Harthaal #TamilNewsKing
0 comments:
Post a Comment