பிரித்தானியாவில் இலங்கை தமிழரான Sanjayan Nadarajah என்பவர் பெண்களை தவறான முறையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அதனை பாலியல் தொடர்பான வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்திற்காக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவர் வேதியியல் பட்டம் பெற்றுள்ள இவர் மருந்து ஆலோசராக பணியாற்றி வருகிறார். Tadworth நகரில் £775,000 பவுணட் மதிப்புள்ள வீட்டில் வசித்து வரும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்
இவர் லண்டனின் சுரங்கப்பாதை வழியாக குட்டைப்பாவடை அணிந்து செல்லும் பெண்களை தவறாக புகைப்படம் எடுத்துள்ளார் . தனது மடிக்கணனி பையில் கமெராவை மறைத்து வைத்து ஷாப்பிங் கடைகளில் பெண்கள் அரைநிர்வாணமாக ஆடை மாற்றுவது, விமான நிலையங்களிலும் பெண்களை பின்தொடர்ந்து சென்று அவர்களை தவறாக புகைப்படம் எடுத்துள்ளார்
இவ்வாறு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை MonkeyMan9 என்ற மின்னஞ்சல் மூலம் சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார், இவரது மின்னஞ்சல் வாயிலாக இவர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்
பிப்ரவரி மாதம் 19 ஆம் திகதி இவருக்கு Blackfriars Crown நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என கூறப்படுகிறது.
வழக்கறிஞர் Nikhil Khosla கூறியதாவது, குட்டைப்பாவடை அணிந்திருக்கும் பெண்கள் விழப்புணர்வு இன்றி நடந்துசெல்கையில் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வீடியோ எடுத்துள்ளார்.
இதுவரை சுமார் 57 வீடியோக்களை MonkeyMan9 என்ற பெயரில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் 9 வீடியோக்கள் Friends of User மட்டுமே என குறிக்கப்பட்டிருந்தது.
இவற்றில் சில வீடியோக்கள் பல்பொருள் அங்காடிகள் மற்றும் விமான நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன மற்றும் பெண்கள் தங்கள் அறையில் உள்ளாடைகளை மாற்றுவதையும் படம்பிடித்துள்ளார்.
Lakeside Shopping சென்டரில் உள்ள எக்ஸ்லேட்டரில் மட்டும் சுமார் 9 வீடியோக்கள் எடுத்துள்ளார் என்பது வழக்குவிசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது தரப்பு விளக்கமாக Sanjayan Nadarajah நீதிமன்றத்தில் கூறியதாவது, இவ்வாறு வீடியோக்கள் எடுப்பது தனக்கு ஆர்வமானது என்றும் தான இவ்வாறு செய்வது குறித்த பெண்களுக்கு தெரிந்தே செய்துள்ளேன் என கூறியுள்ளார்.
வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் இவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
நீதிபதி லிஸ் பிளேக் கூறியதாவது, இந்த விடயங்கள் மிகவும் தீவிரமானவை. நீதிமன்றத்தில் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment