கனடாவின் நோவா ஸ்கோஸியா பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த தீ விபத்த்pல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவைச் சேர்ந்த இப்ராஹிம் குடும்பம் போருக்கு தப்பி நிம்மதியாக கனடாவில் வாழலாம் என்று 2017 ம் ஆண்டு அகதிகளாக வந்தவர்கள் தங்கள் குடும்பத்தையே இழந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இச் சம்பவமானது ஹாலிஃபாக்சில் உள்ள அவர்கள் வீட்டில் இடம் பெற்றுள்ளது. வீட்டில் திடீரென தீப்பற்றியுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் பிடித்த தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறியுள்ளனர். வீட்டுக்குள் தீயில் சிக்கி இப்ராஹிமின் மூன்று மாதக் குழந்தை முதல் 14 வயது மகன் வரை ஏழு குழந்தைகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்கள்.
தீப்பற்றியெரியும் வீட்டுக்குள் நுழைந்து பிள்ளைகளைக் காப்பாற்ற முயன்ற இப்ராஹிம் கடுமையான தீக்காயங்களுடன் அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி காதர் பாரோ பெருமளவில் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். பொலிசார் தீப்பிடித்ததற்கான காரணத்தை அறிய பல மாதங்கள் வரை ஆகலாம் என்று தெரிவித்துள்ளனர்.
#FireAccident #SyriaFamily #Halifaxhousefire #Muslims #CanadaFireAccident #NovaScotia #Halifax #Refugees #TamilNewsKing
0 comments:
Post a Comment