கொக்கெய்ன் போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையில் இருந்து இலங்கை வந்த 34 வயதுடைய ஒருவரே 1 கிலோ கிராம் கொக்கெய்னுடன் தைானதாக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 01 கோடி 50 இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
0 comments:
Post a Comment