பக்கச்சார்பாக நடக்கும் பொலிஸார் ; ஒட்டுசுட்டான் மக்கள் போராட்டம்

விபத்தை ஏற்படுத்தியவர்களுக்குப் பக்கச்சார்பாகப் பொலிஸார் நடந்து கொண்டனர் எனக் குற்றஞ்சாட்டி ஒட்டுசுட்டான் மக்கள் இன்றையதினம் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




முல்லைத்தீவு முத்துஜயன் கட்டுப் பகுதியில் வலதுகரை பிராதன வீதியில் நேற்றையதினம் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர், சைக்கிளில்  வீதியால் செல்லமுற்பட்ட தாயார் ஒருவரை மோதினர்.

படுகாயமடைந்த பெண் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.


முத்துஜயன் கட்டு முதலாம் கண்டதை சேர்ந்த 41 அகவையுடைய சுபாதீஸ்வரன் நந்தினிதேவி என்ற குடும்ப பெண்ணே  படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்துத் தொடர்பாக ஒட்டுசுட்டான் பிரதேச வீதிப் போக்குவரத்துப் பொலிஸார், விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு பக்கச்சர்பாக நடந்து கொள்வதுடன், கையூட்டுப் பெற்று எவரையும் கைது செய்யவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டனர்.

பொலிஸாரின் இச் செயலுக்கு எதிராக முத்துஜயன் கட்டு வலது கரை முதன்மை வீதியை மறித்து, ரயர்களை போட்டு எரித்து, வீதியில் எவரும் பயணிக்க முடியாதவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய அதிகாரிகள் , பாதிக்கப்பட்ட தரப்புடன் பேசியதுடன், சம்பவம் குறித்து விசாரணைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர். 

இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment