மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்துவிட்டு சடலத்துடன் இரவு முழுவதும் உறங்கிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆழ்துளை கிணறு ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வரும் வினோத் டான்சிங் பவார், கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக பிரியங்கா ராத்தோடு என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
ப்ரியங்கா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டிற்கு வந்த வினோத், ப்ரியங்காவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த வினோத், திடீரென மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அதனை நினைத்து வேதனையடைந்த வினோத் மனைவியின் சடலம் அருகே இரவு முழுவதும் உறங்கியுள்ளார்.
அதிகாலை எழுந்ததும் வேகமாக பொலிஸ் நிலையம் சென்ற வினோத், மனைவியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்து சரணடைந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், வினோத் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment