காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான முழு அடைப்பிற்கு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை வழங்குகின்றது.
கொடிய யுத்தத்தால் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அவர்களின் உறவினர்கள் தொடரந்தும் போராட்டங்கள் நடாத்திவரும் நிலையில் அவர்களில் பலர் ஏமாற்றம் அடைந்து இறந்துவிட்ட சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழ்கின்றன.
இந்நிலையில் வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தை வருகின்ற திங்கட்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்து வடக்கு முழுவதும் ஸ்தம்பிக்கும் நிலையில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இத்தகைய ஜனநாயகவழிப் போராட்டத்திற்கு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை வழங்குகின்றது.
திங்கட்கிழமை வடமாகாணப் பாடசாலைகளில் கடமைபுரியும் அதிபர்கள், ஆசிரியர்கள் கடமைகளைப் புறக்கணித்து பூரண ஆதரவை வழங்குமாறு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கம் பணிவுடன் கேட்டுள்ளது.
அத்தோடு மாணவர்களை வீடுகளில் அமைதியாக இருக்க வழி
ஏற்படுத்துமாறு பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment