இராட்டினம் உடைந்து வீழ்ந்ததில் தாயொருவர் உயிரிழந்ததுடன், மகள் படுகாயமடைந்துள்ளார்.
கம்பஹா – நய்வல பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் இன்று காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இராட்டினத்தில் உள்ள அமரும் பகுதி ஒன்று உடைந்து வீழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சியம்பலாபிட்டி - கொட்டுகொட பகுதியை சேர்ந்த பெண் எனத் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 13 வயது சிறுமி கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment