திருமண வைபவத்தின்போது, யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதாக அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
பென்சில் வேனியா மாநிலத்தைச் சேர்ந்த மத்தியூ அய்மர்ஸ் என்பவருக்கு எதிராகவே இவ்வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இவரின் திருமண வைபவம், கடந்த நவம்பர் மாதம், பிலடெல்பியா நகரிலுள்ள விடுதியொன்றில் நடைபெற்றது.
ஆனால், திருமணம் முடிந்து சிலமணித்தியாலங்களில் மணமகன் மெத்தியூ அய்மர்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவ்விடுதியில் பணியாற்றிய, பதின்ம வயது யுவதியொருவரை அவர் பாலியல் துஷ்பிரயோகப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டே இதற்குக் காரணம்.
31 வயதான மத்தியூ அய்மர்ஸுக்கு எதிரான குற்றப்பத்திரிகை கடந்த வாரம் கையளிக்கப்பட்டது. குறித்த யுவதியை பின்தொடர்ந்து சென்று கழிவறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகப்படுத்தினார் என அய்மர்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எய்மர்ஸ் மீதான குற்றச்சாட்டுகளை அவரின் சட்டத்தரணி நிராகரித்துள்ளார்.
0 comments:
Post a Comment