ஐக்கிய நாடுகளின் வலிந்து மற்றும் தன்னிச்சையற்ற காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான பணிக்குழு இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.
பணிக்குழுவின் 117ஆவது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை பொஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் இடம்பெற்றது.
இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து இதன்போதே ஆராயப்பட்டதாக அந்தப் பணிக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதேநேரம், பங்களாதேஸ், புருண்டி, எகிப்து, பாகிஸ்தான். ருவண்டா, சவுதி அரேபியா, சூடான், ஐக்கிய அரபு இராச்சியம், வியட்நாம்', கொலம்பியா, சீனா, ரஷ்யா, ஈரான், குவைட், கென்யா, தாய்லாந்து, துருக்கி, வெனிசுவெலா உட்பட பல்வேறு நாடுகளில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் குறித்து இந்தப் பணிக்குழு ஆராய்ந்துள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான தமது முன்னோக்கிய விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் வலிந்து மற்றும் தன்னிச்சையற்ற காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான பணிக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
இந்த நிலையில், பணிக்குழுவின் 118 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment