கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தை 4 ஆயிரம் ரூபாவாக அதிகரித்து வழங்குமாறு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.
முன்பள்ளிகளின் ஆசிரியர்களாக சுமார் 4 ஆயிரத்து 500 பேர் கிழக்கு மாகாண சபை கல்வி அமைச்சின் நியமனத்துடன் கடமையாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு மேலாக 3 ஆயிரம் ரூபா வீதம் மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
சம்பளம் தமக்குப் போதாமை தொடர்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கமைவாக திறைசேரி,மாகாண கல்வியமைச்சு , நிதி அமைச்சு போன்றவற்றுடன் கலந்துரையாடியதன் பின்னர், அனைவரினதும் இணக்கத்துடன் ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தை 3 ஆயிரம் ரூபாவிலிருந்து முதல் 4 ஆயிரம் ரூபா வரை அதிகரித்து வழங்க ஆளுநர் மாகாண கல்வியமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைவாக எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4 ஆயிரம் ரூபாவாக வழங்கப்படும்.
0 comments:
Post a Comment