மாத்தறை கந்தர பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின்போது
சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் பைக்கெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினர் வழங்கிய தகவலையடுத்து இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேகநபரிடமிருந்து, 50 சிகரெட் பைக்கெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மாத்தரை திக்வெல்ல பகுதியில் வசிக்கும் 27 வயதானவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment