முச்சக்கரவண்டி மற்றும் டிப்பர் ரக வாகனம் மோதியதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நாவலபிட்டி - கம்பளை பிரதான வீதியில் பத்துனுபிட்டிய வரகாவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கினிகத்தேனை மற்றும் குருந்துவத்தை பகுதிகளை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியும் அதில் பயணித்த ஒருவருமே உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்த நாவலபிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment