இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையின் சில ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட முறைகேடான பதவி உயர்வை இரத்துச் செய்யக்கோரி சாலை ஊழியர்கள் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்து நிலைய வீதியின் முன்பாக இன்று அதிகாலை முதல் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முறைகேடான பதவி உயர்வுகளை இரத்துச் செய் , தகுதி சேவைக்காலம் , கல்வித்தகமை பாராது பதவி உயர்வு வழங்க முடியுமா? , இ.போ.ச பதவி உயர்வில் அரசியல் வந்தது எப்படி? , ஜனாதிபதியே முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை இரத்து செய்யுங்கள், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கியது எப்படி? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகள் போராட்ட இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment