ஆசிரியர் அதிபர் சேவைகளில் காணப்படுகின்ற முரண்பாடுகளை தீர்க்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சேவை சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
சம்பள உயர்வு மற்றும் சம்பள நிலுவையினை உடனடியாக வழங்குவதுடன் ஆசிரியர்களுக்கான மேலதிக வேலைகளை குறைத்து முழுமையான கற்பித்தலை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கைகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் தொடர்ச்சியான போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கப்போவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
#SrilankaNews #TeachersUnion #Protest #Education #Ministry #Government #SrilankaPolitics #PoliticalNews #TamilNewsKing
#SrilankaNews #TeachersUnion #Protest #Education #Ministry #Government #SrilankaPolitics #PoliticalNews #TamilNewsKing
0 comments:
Post a Comment