மக்கள் செல்வாக்கு கொண்ட ஒருவரையே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது தாம் வேட்பாளராக முன்நிறுத்தவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
த ஹிந்து பத்திரிகையினால் பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கழிந்துள்ளன.
எனினும், தமிழ் மக்களை திருப்திபடுத்த முடிந்துள்ளதுடன், அரசியல்வாதிகளை திருப்திபடுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது புதிய அரசியல் அமைப்பு குறித்த கேள்வி மஹிந்த ராஜபக்ஷவிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், கடந்த நான்கு வருடங்களாக அவ்வாறான ஒரு செயற்பாடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது தேர்தல்களில் வாக்குகளை பெற்றுக் கொள்ளவே இவ்வாறன தொரு முயற்சி மேற்கொள்ளப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment