சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தின்; இல்லத்துக்கு நடிகர் ரஜினிகாந்த சென்று அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார்.
இச் சந்திப்பானது இன்று முற்பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் விஜயகாந்தை இன்று ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடன் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும், மறுபக்கம் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ரஜினிகாந்தின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நேற்று தமிழகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment