தொடருந்தில் மோதிய இளைஞன் சாவு

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் நேற்று தொடருந்தினால் மோதப்பட்ட 21 வயது இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

நேற்று இரவு கொடிகாமம் தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட தொடருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் கடவையற்ற பகுதியில் தண்டவாளத்தைக் கடந்த போது, இளைஞனை மோதியது.

கால் முறிந்ததும் மற்றம் தலையில், காயமடைந்த நிலையிலும் சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கிய போதிலும் இளைஞன் இன்று உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இறப்பும் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

அறிக்கையைப் பார்வையிட்ட நீதிவான் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் மூலம் சாவிசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment