ஜெனீவா செல்வது குறித்து தீர்மானம்!
ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வில் கலந்துக் கொள்வது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றையதினம் தீர்மானிக்கவுள்ளது.
அதன் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதியில் கூடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு, இதுகுறித்து விரிவாக ஆராயும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கை தொடர்பான இரண்டு முன்னையப் பிரேரணைகள் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளன.
மேலும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை தொடர்பாக புதிய பிரேரணை ஒன்றை முன்வைக்கவும் தயாராகியுள்ளன.
இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தில் முக்கியமான செயற்பாடுகளை வெளிப்படுத்த வேண்டி இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment