துப்பாக்கிகளுடன் இருவர் கைது

துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த, இருவர் நேற்றுக்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகலவத்தை - பிம்புர பிரதேசத்தின் இரு பகுதிகளில் வைத்து 36 மற்றும் 22 வயதுகளை உடையவர்களே கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட 4 துப்பாக்கிகளும் வேறுசில வெடிப்பொருள்களும் மீட்கப்பட்டதாகப், பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை , கொழும்பு கெசல்வத்தை - வேல்லவீதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவமானது, பாதாள உலக குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற முறுகல் நிலையினாலேயே மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

டுபாயில் கைது செய்யப்பட்ட, கெசல்வத்தை தினுக எனப்படும் பாதாள உலக குழு உறுப்பினரின், குழுவினரே குறித்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 28 வயதுடைய நபர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment