மட்டக்களப்பு மாவட்டத்தில் மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள தொற்று நோயினால் உடனடியாக இறைச்சிக் கடைகளை இரு வாரங்களுக்கு மூடுமாறு ஏறாவூர் சுகாதார மருத்துவ அதிகாரி எம்.எச்.எம். தாரிக் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏறாவூர் நகரசபைப் பிரிவின் 14 இறைச்சிக் கடைகளும் இன்றுமுதல் அடுத்து வரும் இரு வாரங்களுக்கும் மாட்டு இறைச்சி விற்பனை செய்ய முடியாது.
ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைப் பிரிவின் கீழ் வரும் 9 மாட்டிறைச்சிக் கடைகளும் இந்த உத்தரவைப் பின்பற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ஆட்டிறைச்சிக் கடைகளுக்கும் கோழி இறைச்சிக் கடைகளுக்கும் விடுக்கப்படவில்லை.
நோய்த் தொற்றுக்களுக்குள்ளான மாடுகள் கொல் களத்துக்கு வரும் சந்தர்ப்பத்தில் அவை பொதுச் சகாதாரப் பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என நிராகரிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட விடயங்கள் ஏறாவூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment