மின் மோட்டர்களைத் திருடி விற்ற கில்லாடி பிணையில் விடுவிப்பு

நீரிறைக்கும் மின் மோட்டர்களைத் திருடிய புத்தளம் வாசி, சாவகச்சேரி நீதிமன்றால் இன்றையதினம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி கைதடி ஆரியபவான் வர்த்தக நிலையத்தில் உள்ள கிணற்றில் பொருத்தப்ட்டிருந்த 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்மோட்டர் திருடப்பட்டது.

வர்த்தக நிலைய உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

இதேவேளை நுணாவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லீம் நபரை அப் பகுதி மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது கைதடி வர்த்தக நிலையத்தில் மின்மோட்டர் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.

மேலும் 7 இடங்களில் மேற்கொண்ட மின்மோட்டர் திருட்டுக் குற்றத்தையும் ஒப்புக் கொண்டார்.

திருடிய மின் மோட்டர்களை யாழ்.காங்கேசன்துறை சாலையில் உள்ள கடையொன்றில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த கடைக்குச் சென்று விசாரித்த போது இவரால் விற்பனை செய்யப்பட்ட ஏழு மின்மோட்டர்கள் மீட்கப்பட்டன.

திருட்டுப் பொருள்கள் எனத் தெரிந்தும் அவற்றை விலைக்கு வாங்கியமைக்காக கடை உரிமையாளரையும் கைது செய்து மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தினர்.

வழக்கு விசாரணைக்கு ( 05.02.) எடுக்கப்பட்ட போது மின்மோட்டர்கள் திருடிய நபர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கடை உரிமையாளர் இரண்டரை லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது திருட்டு நபரை ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிவான் உத்தரவிட்டார்.




Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment