ஜாதிக கெல உறுமயவின் தலைவரும் மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்துக்கு இன்று காலை வருகை தந்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளை அமைச்சர் பார்வையிட்டதுடன் புதிய அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து யாழ் நீதி மன்றத் தொகுதிக்கு முன்பாக யாழ்ப்பாண நிர்வாக தொகுதிக்கான அடிக்ல்லை நட்டு வைத்தார். பின்னர் தூர சேவை பேருந்து தரிப்பிடத்திற்கான அடிக்கல்லையும் நட்டார்.
நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமித்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாநகரமுதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள்அரச அதிகாரிகள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment