கொட்டகலை மேபீல்ட் தோட்ட ஆலயம் உடைத்து திருட்டு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேபீல்ட் தோட்ட சாமஸ் பிரிவின் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்த இனந்தெரியாதவர்கள் ஆலயத்தின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலியை களவாடிச் சென்றுள்ளனர்.


இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொள்ளும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். திருட்டு சம்பவத்தையடுத்து திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு புகார் செய்யப்பட்டதையடுத்து பத்தனை பொலிஸாரும், நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரும், கைரேகை பிரிவினரும் ஆலய கட்டிடத்திற்கு சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.


அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment