முல்லைத்தீவு கொக்குளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கணித பாடத்துக்கு ஆசிரியர் இல்லாத நிலமை காணப்படுகிறது.
மிகவும் பின்தங்கிய பாடசாலையாக காணப்படும் இந்த பாடசாலையில் கணித பாட ஆசிரியருக்கான வெற்றிடம் நீண்டகாலமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆறு மாத காலங்களுக்கு மேலாக கணித பாடத்துக்கு ஆசிரியர் இல்லாத நிலையில் மாணவர்கள் பல சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment