யாழ்.கைதடியில் உள்ள சித்த மருத்துவ கல்லூரிக்கு முன்பாக வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நீர் விநியோகத்திற்கான குழாய் வெட்டப்பட்ட போது அதற்குள் வெடிக்காத நிலையில் இருந்த செல் மீட்கப்பட்டது. இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் அதனை எடுத்துச் சென்றுள்ளனர்.
0 comments:
Post a Comment